Super User / 2011 ஜனவரி 09 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தில் நேற்று பகல் முதல் தற்போது வரை பெய்து கொண்டிருக்கும் தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்தவகையில், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 10000; குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்து தமது சொந்தங்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளோர் உள்ளிட்ட 5000 முதல் 6000 வரையிலான குடும்பங்களுக்கு உணவு சமைத்து வழங்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதேச செயலாளர் எம்.எம். நௌபர் தெரிவித்தார்.
இதில் மருமுனை மற்றும் பாண்டிருப்பு பகுதிகளில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுத் தொகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து அங்கிருந்த மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறி அருகிலுள்ள சம்ஸ் மத்திய கல்லூரியுள்ள தற்காலிகமாகத தங்கியுள்ளனர்.
இதேவேளை, மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
.jpg)
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025