Suganthini Ratnam / 2011 ஜனவரி 10 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
ரோஸ் சரிட்டி ஸ்ரீலங்கா நிறுவனத்தின்; பெண்கள் அமைப்புக்கான வருடாந்த கூட்டமும் வாழ்வாதார பயிற்சி நெறியினை முடித்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் வைபவமும்; நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாண்டிருப்பு கல்யாணி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றது.
இவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தோணி றிட்சட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நவிதன்வெளி பிரதேச செயளாலராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எம்.கோபாலரட்ணம் கௌரவிக்கப்பட்டார்.
இவ்வமைப்பு பெண்களின் சுயதொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வருடந்தோறும் தையல் பயிற்சிகளை நடத்தி வருகிறது. மேற்படி பயிற்சி மூலம் தயாரான உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்வதுடன், அவர்கள் தொடர்ந்து சுயமுயற்சியில் தமது வாழ்வாதாதரத்தை முன்னேற்றிக் கொள்வதற்காக அதற்குரிய உபகரணங்களையும் வழங்கி வருகிறது.
.jpg)
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025