Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூலை 01 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
மக்கள் வங்கியின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மக்கள் வங்கி கிளையில் சர்வமத பிரார்த்தனைகளுடன் பல நிகழ்வுகள் நடைபெற்றன.
கல்முனை மக்கள் வங்கி கிளை முகாமையாளர் எம்.ஐ.எம்.பதுறுதீன் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸால் காசிம், எம்.ரி.ஹஸன் அலி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு சமய பெரியார்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி வைத்தனர். இதன்போது 50 ஆண்டுகள் பொன்விழா ஞாபகார்த்த மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளையிலும் கிளை முகாமையாளர் எம்.ஸி.எம்.ஹனீபா தலைமையில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றபோது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட அதிதிகளும் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.
1961ஆம் ஆண்டு ஜுலை மாதம் மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையிலுள்ளது.
55 minute ago
7 hours ago
7 hours ago
radan Friday, 01 July 2011 08:46 PM
பலூன் வானத்தில் விடாமல் சிறுவர்களுக்கு கொடுக்கலாமே?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
7 hours ago
7 hours ago