2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனை வாகன விபத்தில் ஒருவர் காயம்

Menaka Mookandi   / 2011 ஜூலை 06 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்தார். கார் ஒன்று சமிக்ஞையின்றி திரும்ப முற்பட்டபோது, அதன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் காரில் மோதுவதைத் தவிர்க்கும் வகையில் எடுத்த முயற்சியே விபத்தில் முடிந்து.

இந்த விபத்தின் போது குறித்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதுண்டு, அருகிலிருந்த வடிகானில் வீழ்ந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் காயங்களுக்குள்ளான நிலையில் அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு சிசிக்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட காரும் சிறிதளவு சேதத்துக்குள்ளாகியுள்ளது.மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0

  • siraj siro maligaikadu Sunday, 10 July 2011 04:42 PM

    கவனம் சார் ............நம்மல நம்மதான் பார்த்துக்கணும் .........நம்ம ஊர்ல இப்படியான விஷயம் சகஜம் ஆகிடுத்து.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X