2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

Super User   / 2011 ஜூலை 21 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் 'சிறுவர் பாதுகாப்பு' தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஒரு நாள் செயலமர்வு அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் தலைவரும் அம்பாறை மாவட்ட செயலாளருமான சுனில் கன்னங்கர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான பிரதான சட்டங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான செய்திகளை வெளியீடும் போது ஊடகவியலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் உட்பட பல விடயங்கள தொடர்பில் வளவாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.நதீர், அம்பாறை பிரதேச செயலக உளவள அதிகாரி பீ. தமயந்தி, சட்டத்தரணி ஆரியவம்ச ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X