2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மூன்று அரச நிறுவனங்களுக்கு விருதுகள்

Super User   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கும் விழாவில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அரச நிறுவனங்கள் விருதுகளைப் பெற்றுக்கொண்டன.

அம்பாறை பெரிய வைத்தியசாலை, நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியவையே மேற்படி மூன்று நிறுவனங்களுமாகும். 

உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் தேசிய உற்பத்தி திறன செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2010ஃ2011ஆம் ஆண்டுகளுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாயநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போதே மேற்படி மூன்று நிறுவனங்களும் தமக்கான விருதுகளைப் பெற்றுக் கொண்டன. உள்ளக திணைக்கள பிரிவில் அம்பாறை பெரிய வைத்தியசாலை முதல் தரத்தினையும் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை மூன்றாம் தரத்தினையும், நுண் பிரிவினில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய உத்தியோகத்தர் காரியாலயம் மூன்றாம் தரத்தினைப் பெற்றுக் கொண்டமைக்காகவே மேற்படி தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் வழங்கப்பட்டன. 

உற்பத்தித் திறன் மேம்பாட்டு அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி விழாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதியாகவும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் அதிதிகளாக கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X