2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஆலையடிவேம்பு பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படவில்லை: தவிசாளர்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படவில்லை என்றும் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்துக்கு சகல உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்காக கூட்டம், எதிர்வரும் 31ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் சபையின் தவிசாளர் கே.ரட்ணவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"2013ஆம் ஆண்டுக்கான பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டமானது சென்ற வருடத்தை விட தெரு மின்விளக்கு பொருத்த 5 இலட்சமும் சமூகக் கல்வி நலநோம்பு சேவைக்காக 5 இலட்சமும் பிரேத ஊர்த்திக்காக 12 இலட்சமும் ஒதுக்குவதாக சென்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 24ஆம் திகதி வரவு – செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது வேறு பல விடயங்கள் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. இதனால் நேரம் கடந்த நிலையில் நான்கு பேர் வெளியேறினர்.

ஆதரவாக ஐந்து பேர் அமர்ந்திருந்த நிலையில், அதன்போது முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய எதிர்வரும் 31ஆம் திகதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது" என்று அவர் தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X