2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நெல் கொள்வனவிற்கு போதியளவு நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2013 ஜனவரி 19 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் போதியளவு நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் இம்முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது நெல்லினை குறைந்த விலையில் தனியாருக்கு அவசரப்பட்டு விற்பனை செய்யத்தேவையில்லை எனவும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார். 

நாவிதன்வெளி பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 15 குடும்பத்தவர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வின் ஆரம்ப வைபவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் சொந்த நிதியிலிருந்து மேற்படி தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்ளூ

இம்முறை ஏற்பட்ட வெள்ளத்தினால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அவசர நிதித் தேவை காரணமாக அவர்கள் தமது நெல்லினை குறைந்த விலைக்கு அவசரப்பட்டு விற்பனை செய்ய முயற்சிப்பார்கள். ஆனால், அவ்வாறு அவசரப்படத் தேவையில்லை. விசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் போதியளவு நிதியினை ஒதுக்கியுள்ளது என்றார்.

இந் நிகழ்வில், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். கரன், நடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி. ஜெயாகர், நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர் ஏ.கே. அப்துல் சமத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X