2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'பாதுகாப்புக் குழுக்களால் சிறப்பான முறையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன'

Kogilavani   / 2013 ஜனவரி 22 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


'பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் புரிந்துணர்வையும் சௌஜன்யத்தையும் ஏற்படுத்தும் நோக்குடன் பொலிஸ்; மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் நாட்டின் சகல பிரதேசங்களிலும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் நிறுவப்பட்டு சிறப்பான முறையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை நாம் காணலாம். இதனை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்றுவந்த குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளன' என அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி டீ.சீ.டீ.தென்னக்கோண் தெரிவித்தார்.

ஆலையடி வேம்பு பிரதேச செயலக சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை  நவரெட்னராஜா அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி டீ.சீ.டீ.தென்னக்கோன்; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், சிவில் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி அப்துல்லாஹ், நிர்வாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரம், கிராம உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாபபு குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன் கிராமத்தின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X