2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைக்கழக மாணவரால் தாக்குதலுக்குள்ளான பஸ் நடத்துனர்?

A.P.Mathan   / 2013 ஜனவரி 22 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போவில் கடமையாற்றும் பஸ் நடத்துநர் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் இன்று காலை சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட சேவையினை வழங்கும் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் நடத்துநரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மருதமுனையைச் சொந்த இடமாகக் கொண்ட ஏ.எல்.எம். சியாம் எனும் நடத்துநர் மீதே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அக்கரைப்பற்று 02ஆம் கட்டையிலிருந்து ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வரை இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்று வார நாட்களில் சேவையில் ஈடுபடும். இது ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குப் பயணிக்கும் மாணவர்களுக்கான விசேட பஸ் சேவையாகும்.

குறித்த பஸ் வண்டியானது இன்று காலையும் வழமைபோல் போக்குவரத்தில் ஈடுபட்டது. இதன்போது, பஸ்ஸில் பயணித்த பல்கலைக்கழக மாணவர்களிடம் பயணச் சீட்டினைப் பெறுமாறு பஸ் நடத்துநர் கோரியுள்ளார். ஆனால், மாணவர்கள் தாம் பருவகாலச் சீட்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். இதற்கமைய பருவகாலச் சீட்டினை வழங்குமாறு நடத்துநர் கோரியுள்ளார். ஆயினும் மாணவர்கள் பருவகாலச் சீட்டினையும் வழங்க முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு, இறுதியில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தன்மீது சுமார் 10 பேர் தாக்குதலை மேற்கொண்டதாகவும், தன்னுடைய பயணச்சீட்டுப் புத்தகத்தினை தாக்குதலை மேற்கொண்டோர் சேதப்படுத்தியதோடு, அதனுள் இருந்த பணத்தில் ஒரு தொகையினை எடுத்துக் கொண்டதாகவும் தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் நடத்துநர் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திலேயே பஸ்ஸினை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட நடத்துநரை பஸ்ஸின் சாரதி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி - பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நடத்துநரை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டதோடு, பஸ் வண்டியினை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரிடம் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்து கொண்ட அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0

  • Hasee Wednesday, 23 January 2013 12:48 PM

    முற்றிலும் தவறானது.

    Reply : 0       0

    manithan Thursday, 24 January 2013 08:55 AM

    பல்கலை கழக மாணவர்கள் (குறிப்பிட்ட சிலர்) பஸ் வண்டியிலும் பல்கலைக் கழக வளாகத்திலும் தகாத விளையாட்டுக்களில் ஈடுபகின்றனர். பஸ் வண்டிகளில் அந்த சில்மிசத்துக்கு இடம் கொடுக்காத நடாத்துனர் தாக்கப்பட்டார் என்பதுதான் உண்மை.
    சாட்சிகள் கை வசம் உள்ளன. பல்கலைக‌ கழக மாணவர்கள் (குறிப்பிட்ட சிலர்) உத்தமனும் இல்லை ....யும் இல்லை. அவர்கள் அடிக்கும் கூத்துக்கு முடிவுதான் என்ன?

    Reply : 0       0

    saleem Thursday, 24 January 2013 11:21 AM

    அறிவு மட்டும் போதாது மாணவனே அடக்கமும் வேணும்

    Reply : 0       0

    Nallawan Thursday, 24 January 2013 01:36 PM

    இன்றைய உலகில் ஆங்கிலம் தெரியாத பட்டதாரிகள் உள்ள ஒரே இடம் இதுதான். அஸ்ரப் செய்த மகா தவறுகளில் ஒன்று தென்கிழக்கு ஒலுவில் வித்தியாலயத்தை நிறுவியது.

    Reply : 0       0

    vallarasu Thursday, 07 February 2013 04:54 PM

    எனது மகளை பிச்சை எடுக்க வைத்தாலும் அந்த பால்கழகம் வேண்டாம்டா சாமி. அப்படி அநாகரிகம் நடக்குது அப்பா>

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X