2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பல்கலை மாணவர் - பஸ் நடத்துநர் பிரச்சினை தீர்த்துவைப்பு

Super User   / 2013 ஜனவரி 23 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹனீக் அஹமட்

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலை பஸ் நடத்துநர் தாக்கப்பட்டதாக எழுந்த பிரச்சினை சமாதானமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடத்துநரை தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்படும் மாணவர்கள் நேற்றைய தினம் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் வைத்து தமது குற்றத்தினை ஒப்புக் கொண்டதோடு, பாதிக்கப்பட்ட நடத்துநரிடம் மன்னிப்புக் கோரினர்.

இதனை தொடர்ந்து குறித்த விவகாரம் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டதாக அக்கரைப்பற்று சாலை ஊழியர்கள் சங்க செயலாளர் ஏ.எம். முபாறக் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எம். ஹாஜா முகைதீன், இ.போ.சபையின் அக்கரைப்பற்று சாலை உதவி முகாமையாளர் ஏ.எல். ஹனீபா உள்ளிட்டோர் முன்னிலையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் வைத்து மேற்படி பல்கலைக்கழக மாணவர்கள் மன்னிப் கோரியதையடுத்தே மேற்படி விவகாரம் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது, பஸ் நடத்துநரிடமிருந்து தொலைந்து போன பணத் தொகையினையும் தாக்குதலை மேற்கொண்ட மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து வழங்கியுள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலை பஸ் நடத்துநர் மீது, பஸ்ஸில் பயணித்த மாணவர்கள் சிலர் - தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து நடத்துநர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்பான செய்தி:

பல்கலைக்கழக மாணவரால் தாக்குதலுக்குள்ளான பஸ் நடத்துனர்?


  Comments - 0

  • aroos Thursday, 24 January 2013 05:13 AM

    பஸ் நடத்துநர் சியாம் இவர் பயணிகளிடம் பற்றுசீட்டு வழங்குவதிலும், மீதிப்பணம் வழங்குவதிலும் அசமந்த போக்கினை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.

    Reply : 0       0

    manithan Thursday, 24 January 2013 09:01 AM

    அறூஸ் சில்லறை கொண்டு போனா நல்லம்.

    Reply : 0       0

    aroos Thursday, 24 January 2013 12:03 PM

    எல்லா நேரமும் சில்லறை இருப்பதில்லைதானே ! இந்த நடத்துனர் akkaraipatu - திருகோணமலை காலை சேவையில் கடமை புரிவதுண்டு. சாதாரணமாக மட்டகளப்பு சென்றடைய முன் மீதிப்பணம் கொடுக்கவில்லை என்று சண்டைகள் நடப்பதையும் நடத்துனர் காரசாரமாக பயணிகளுடன் நடந்துகொள்வதையும் பலமுறை அவதானித்திருகின்றேன்

    Reply : 0       0

    manithan Friday, 25 January 2013 03:11 PM

    அறூஸ் நீங்கதான் அன்று பஸ் வண்டியில் நடந்த பிரச்சினைக்கு காரணம் என்று கேள்விப்பட்டேன். உண்மையா? பல்கலைக்கழக மாணவி ஒருவர் எனக்கு இந்த தகவலை தந்தார். நீங்க அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பா? இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.

    Reply : 0       0

    vallarasu Thursday, 07 February 2013 04:42 PM

    அன்று பல்கலை கலகம் இன்று பால்கலை கலகம்>

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X