2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தொழில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல் அஸீஸ்


இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழியங்கும் சாய்ந்தமருது தொழில் பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு தொழில் தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீட்டு மின்னிணைப்பு மற்றும் கணினி கற்கைநெறிகளை பூர்த்தி செய்த 40 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சாய்ந்தமருது தொழில் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஹாதீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் மாவட்ட தொழில் பயிற்சி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X