2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சட்டவிரோதமாக கட்டிடங்களை கட்டினாலும் காணிகளை சுவீகரித்தாலும் நடவடிக்கை எடுப்பேன்'

Super User   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

சட்டத்திற்கு விரோதமாக  யார் கட்டிடங்களை கட்டினாலும் காணிகளை சுவீகரித்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

இந்த  நடவடிக்கைகளின் ஊடாக பொதுச் சொத்துக்களை பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'இது எனது கடமையாகும். மக்களுக்காக இவ்வாறான நல்ல விடயங்களை நான் முன்னெடுக்கும் போது எந்த தீய சக்திகளின் எதிர்ப்பு வந்தாலும் நான் அவற்றுக்க அஞ்சாமல் மக்களுக்கு என்றும் சேவையாற்றுவேன்' என அவர் கூறினார்.

நேற்றும் இன்றும் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த விடயம் தொடர்பாக மேயர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

"பொதுச்சொத்துக்கள் மக்களின் சொத்துக்களாகும். இன்று நாம் இதன் மூலம் நன்மை அடைவது போன்று எதிர்கால சந்ததியினரும் இதன் மூலம் நன்மை அடைவார்கள். ஆகவே எதிர்கால இளம் சந்ததியினரின் நலன்கருதி நாம் இந்த சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும். இது  எல்லோரினதும் கடமையாகும்.

இந்த மைதானத்தை சுற்றி உள்ள அயலவர்களினால் மைதானத்தின் காணி சட்டவிரோதமாக சுவீகரிக்கப்பட்டு சுற்று வேலிகள் மற்றும் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதை  கல்முனை பிரதேச விளையாட்டு கழகங்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்தனா். இதனை தொடந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் வேலிகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தேன்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X