R.Tharaniya / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோன்பு காலத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீனின் நெறிப்படுத்தலில் செவ்வாய்க்கிழமை(25) பாரிய உணவுப் பரிசோதனை நடவடிக்கை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்டன.
குறித்த நடவடிக்கையின் போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பங்கேற்றனர்.
இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பண்டங்கள் மற்றும் பொருட்களை சுகாதாரத்துக்கு முறைகேடான வகையில் தயாரித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவைகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு பாவனைக்கு உதவாத பொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.
பின்னர் குறித்த சோதனையில் இனங்காணப்பட்ட 5 உணவக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான விடயங்களை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





பாறுக் ஷிஹான்
31 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
3 hours ago