Freelancer / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக புதன்கிழமை(25) இரவு காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை காரைதீவு பிரதான வீதியில் வைத்து சந்தேக நபர் 500 போதை குளிசைகளுடன் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர் அம்பாறை திசாபுர பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபரிடமிருந்து 500 போதை குளிசைகள் உட்பட சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் காரைதீவு பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .