Freelancer / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் மாநிலம் தவுசா அருகே ஜோத்புரியாவில் 20 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை, 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் ஜோத்புரியாவில் பாண்டூகி என்ற இடத்தில், நேற்று மாலை 6 மணியளவில் இரண்டரை வயது பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளது.
பின்னர் நீண்ட நேர தேடுதலின் பின்னர், அருகில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது நேரம் போராடியும் எடுக்க முடியாமல் போன நிலையில், பொலிஸார், மற்றும் தீயணைப்பு படையிருக்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நவீன கருவிகள் உதவியுடன் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 16 மணி நேரமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இன்று (செப்., 19) காலை 11 மணிக்கு குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
குழந்தையை மீட்டதும் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டபடி, மீட்பு படையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்ததும், ஒட்டு மொத்த கிராமத்தினரும் சேர்ந்து மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.S
27 minute ago
30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
30 minute ago
39 minute ago