Freelancer / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் வனப்பகுதி பரப்பளவு அதிகரித்துள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை, வனப்பகுதி மற்றும் மரங்கள் வளரும் பரப்பளவு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
இதில் மேற்படி காலகட்டத்தில் நாட்டின் வனப்பகுதி மற்றும் மரங்கள் வளரும் பரப்பளவு 1,445 சதுர கிலோமீற்றர் அளவுக்கு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
அந்தவகையில் 2021ஆம் ஆண்டு, 7,13,789 சதுர கிலோமீற்றராக இருந்த வனப்பகுதியின் பரப்பு 2023இல் 7,15,343 சதுர கிலோமீற்றராக அதிகரித்து இருக்கிறது.
இதைப்போல மரங்கள் வளரும் பரப்பளவும் 1,289 சதுர கிலோமீற்றருக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. மொத்தமாக வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு இந்த காலகட்டத்தில் 1,445 சதுர கிலோமீற்றர் அதிகரித்து மொத்தம் 8,27,357 சதுர கிலோமீற்றராக உள்ளது.
இது நாட்டின் நிலப்பகுதியில் 25.17 சதவீதம் என மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும், வனப்பகுதி பரப்பளவு அதிகரிப்பின் மூலம் கூடுதலாக 229 கோடி டொன் கார்பனை உறிஞ்சும் திறன் அதிகரித்துள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
52 minute ago
5 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
5 hours ago
18 Apr 2026