Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 19 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் சூழல் அதிகரித்த நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய அரசு "ஆபரேஷன் சிந்து"-ஐ தொடங்கியது.
தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜூன் 17ஆம் திகதியன்று வடக்கு ஈரானில் இருந்து ஆர்மீனியாவுக்கு வந்த 110 இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஆர்மீனியாவின் தலைநகரான யெரெவனில் இருந்து சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு புதன்கிழமை (18) இரவு புறப்பட்டனர். இந்த மாணவர்கள் குழு வியாழக்கிழமை (19) காலை புது டெல்லி விமான நிலையத்தை அடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே அங்குள்ள இந்தியர்களை அறிவுறுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago