A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பரவலின் 2ஆவது அலை காரணமாக தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2.34 இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 1.45 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 1,341 கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டத்தை நேற்று கூட்டினார். இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம், சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இந்த கூட்டத்தில் பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருந்துகள், ஒக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து விவாதிக்கப் பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
15 minute ago
24 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
54 minute ago
1 hours ago