Lenin Raj / 2026 மே 04 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை, அரலகங்வில - ரத்மெல்தැன்ன பகுதியில் இன்று (04) அதிகாலை வீடு ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அதனுள் சிக்கி 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் அரலகங்வில, ரத்மெல்தென்ன, இலக்கம் 180 என்ற முகவரியில் வசித்து வந்த ஆர்.டி. செனிலி தினேத்மா என்ற முன்பள்ளி மாணவியே உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை காட்டு யானை வீட்டைத் தாக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது சிறுமியுடன் தூங்கிக்கொண்டிருந்த தாய், விளக்கை ஒளிர்விப்பதற்காக எழுந்த சென்ற சமயம் யானை வீட்டின் சுவரைத் தாக்கியுள்ளது.
இதில் சுவர் இடிந்து சிறுமியின் தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
7 minute ago
21 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
30 minute ago
1 hours ago