Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 27 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனே ஹடப்சர் மகாடா காலனியை சேர்ந்தவர் இம்தியாஸ் சேக் (வயது47). இவர் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த ஆண்டு கடனாக பணம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடன் வாங்கிய நபரை மிரட்டி உள்ளார். பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் கடன் வாங்கியவரை தொடர்பு கொண்டு மனைவியுடன் மகாடா காலனியில் உள்ள வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார். இதன்படி அவர் 34 வயதுடைய தனது மனைவியை அழைத்து கொண்டு இம்தியாஸ் சேக் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் கத்தியை காட்டி தம்பதியை மிரட்டியுள்ளார்.
மேலும் கணவரின் கண்முன்பே அவரது மனைவியை இம்தியாஸ் சேக் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து அந்த வீடியோவை வைத்து கொண்டு பணத்தை திருப்பி தரும் வரையில் தன்னிடம் உல்லாசமாக இருக்க வருமாறு பெண்ணை இம்தியாஸ் சேக் மிரட்டி உள்ளார்.
ஒரு கட்டத்தில் அப்பெண் மறுப்பு தெரிவித்ததால் இம்தியாஸ் சேக் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி சம்பவம் குறித்து ஹடப்சர் பொலிஸில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து இம்தியாஸ் சேக்கை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
2 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago