Editorial / 2025 ஜூலை 21 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட மாநிலங்களில் ஸ்ரவண மாதத்தின் முதல் 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இது கன்வர் யாத்திரை என அறியப்படுகிறது. அதன்படி உ.பி.யில் கன்வர் புனித யாத்திரை சென்ற பக்தர்களுக்கு பிரயாக்ராஜில் உள்ள முஸ்லிம்கள் மலர் கொடுத்தும், மலர்களை தூவியும் ஞாயிற்றுக்கிழமை (20) வழியனுப்பி வைத்தனர்.
மத நல்லிணக்கத்துக்கு உதராணமாக உள்ள இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ஸ்ரவண மாதம் இந்த ஆண்டு ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 9-ம் திகதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கங்கை நீரை எடுத்துக் கொண்டு உள்ளூரில் உள்ள சிவன் கோயில்களுக்கு பக்தர்கள் காவடி யாத்திரை செல்கிறார்கள். இந்த யாத்திரையை பக்தர்கள் ஸ்ரவண மாதத்தின் முதல் 13 நாட்களுக்கு மேற்கொள்வார்கள். வரும் 24-ம் திகதி உடன் இந்த யாத்திரை நிறைவு பெறுகிறது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago