Freelancer / 2024 மார்ச் 23 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தும்கூரில் மூன்று சடலங்களுடன் எரிந்த நிலையில் தண்ணீர் வற்றிய ஏரியில் கிடந்த காரை கைப்பற்றிய பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குஞ்சங்கி கிராமத்தில் தண்ணீர் இல்லாத ஏரியில், எரிந்த நிலையில் கார் ஒன்று இருந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது எரிந்த காரின் உள்ளே மூன்று சடலங்கள் கருகிய நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையில், கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த ரஃபீக் என்பவரின் பெயரில் அந்த கார் பதிவாகி இருந்தது தெரியவந்தது ஆனால், இறந்தவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அந்த காருக்குள்; இருந்த சடலங்களை மீட்ட பொலிஸார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏரியில் கார் எப்படி வந்தது?. காருக்கு யார் தீ வைத்தது? கொலை செய்து காருடன் எரித்தார்களா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. S
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago