Editorial / 2025 ஜனவரி 17 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேசத்தில் மனைவி தனது கள்ளக்காதலனுடன் காருக்குள் இருப்பதை கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே பிடிக்க முயன்றபோது அந்த கணவன் காரின் முன்பகுதியில் ஏறினார். இதையடுத்து காரை நிறுத்தாமல் அவரது மனைவியும், கள்ளக்காதலனும் சில கிலோமீட்டர் ஓட்டி சென்றனர். கணவன் ஆபத்தான முறையில் காரின் முன்பகுதியில் தொங்கியபடி நின்றாலும் அவர்கள் காரை நிறுத்தாமல் சென்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளத்தில் தற்போது வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ பார்க்கும் அனைவரையும் பதற வைக்கும் வகையில் உள்ளது.
அதாவது காரின் முன்பகுதியில் ஒருவர் தொங்கியடி நிற்கிறார். அதனை பார்த்தும் கூட காரை ஓட்டும் நபர் நிறுத்தாமல் வேகமாக செல்கிறார். கார் வேகமாக செல்ல காரின் முன்பகுதியில் தொங்கிய நபர் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக இறுக்கமாக காரை பிடித்தபடி நிற்கிறார்.
குறிப்பிட்ட தூரம் சென்ற நிலையில் பிற வாகனத்தில் பயணித்தவர்கள் அந்த காரை நிறுத்துகின்றனர். நடுரோட்டில் கார் நிற்கவே முன்பகுதியில் தொங்கியபடி சென்ற நபர் உடனடியாக கீழே இறங்கி காரை ஓட்டிய நபரிடம் வாக்குவாதம் செய்கிறார்.
இதனை அந்த சாலையில் செல்வோர் தங்களின் செல்போனில் வீடியோ எடுக்கின்றனர். அந்த வீடியா தான் தற்போது பரவி வருகிறது.
குறிப்பிட்ட தூரம் சென்ற நிலையில் பிற வாகனத்தில் பயணித்தவர்கள் அந்த காரை நிறுத்துகின்றனர். நடுரோட்டில் கார் நிற்கவே முன்பகுதியில் தொங்கியபடி சென்ற நபர் உடனடியாக கீழே இறங்கி காரை ஓட்டிய நபரிடம் வாக்குவாதம் செய்கிறார்.
இதனை அந்த சாலையில் செல்வோர் தங்களின் செல்போனில் வீடியோ எடுக்கின்றனர். அந்த வீடியா தான் தற்போது பரவி வருகிறது.
முகமது சமீரின் மனைவி பெயர் நூர் அப்ஸா. இவருக்கும் நஸ்ரூல் ஹசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதையடுத்து மனைவி நூர் அப்ஸா தனது கள்ளக்காதலன் நஸ்ரூல் ஹசன் உடன் காரில் அமர்ந்துள்ளார்.
இதை பார்த்து ஷாக்கான நூர் அப்ஸா கார் அருகே சென்றுள்ளார். அப்போது நஸ்ரூல் ஹசன் திடீரென்று காரில் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் நூர் முகமது சமீர் விடவில்லை. அவரது காரின் முன்பகுதியில் உள்ள இரும்பு கம்பியில் ஏறி காரை நிறுத்த முயன்றார். ஆனால் நஸ்ரூல் ஹசன் காரை நிறுத்தாமல் மொரடாபாத் - ஆக்ரா ரோட்டில் சென்றார். இதனால் முகமது சமீர் காரின் முன்பகுதியை பிடித்தபடி அப்படியே நின்றுள்ளதும், அதன்பிறகு பிற வாகன ஓட்டிகளின் உதவியுடன் தனது மனைவியின் கள்ளக்காதல் நஸ்ரூல் ஹசனை பிடித்ததும் தெரியவந்துள்ளது.
இதுபற்றி அறிந்த பொலிஸார் சம்பவம் இடத்துக்கு வந்து நஸ்ரூல் ஹசனை கைது செய்துள்ளனர். வேகமாக கார் ஓட்டியது, உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் போக்குவரத்து விதியை மீறி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
7 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Feb 2026