A.K.M. Ramzy / 2021 மே 31 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பள்ளிப்பட்டு,
பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சியில் வாரச் சந்தை கூடியது. இதில் பல விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளைக் கொண்டு வந்து கடைகளை அமைத்தனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக வாரச் சந்தைக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இதையறிந்த ஊராட்சி மன்ற தலைவி சாவித்திரி சேகர் சம்பவ இடத்துக்கு சென்று வியாபாரிகளிடம் காய்கறி கடைகளை உடனடியாக அகற்றும்படி கூறினார். ஆனால் வியாபாரிகள் அவரது பேச்சை காதில் வாங்காமல் தங்களது வியாபாரத்தை தொடர்ந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவி சாவித்திரி சேகர் வியாபாரிகள் வைத்திருந்த காய்கறிகளின் மீது பிளீச்சிங் பவுடரை கொட்டும்படி ஊராட்சி ஊழியர்களுக்கு கூறினார்.
ஊழியர்களும் அதேபோல் காய்களின் மீது பிளீச்சிங் பவுடரை கொட்டியதால் வியாபாரிகளுக்கும், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை பொலிஸார் விரைந்து சென்று அவர்களிடையே சமரசம் செய்து வைத்தனர். வியாபாரிகளிடம் சற்று கடுமையாக நடந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவி தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து வியாபாரிகள் தங்கள் கடைகளை அங்கிருந்து அகற்றி சென்றனர்.
6 minute ago
9 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
1 hours ago
1 hours ago