Freelancer / 2026 மே 04 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பியர் போத்தலினால் தலையில் அடித்ததினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் புதுமைமாதா ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று இரவு (3) இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு நண்பர்கள் அனைவரும் புதுமைமாதா ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மது அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் பியர் போத்தலினால் நண்பரின் தலையில் அடித்துள்ளார்.
காயமடைந்தவர் அருகில் உள்ள படியில் சாய்ந்து இரத்தத்திற்குள் இருந்த போது, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போது அவர் உயிரிழந்துவிட்டார்.
தாக்குதலை மேற்கொண்ட அதே இடத்தைச் சேர்ந்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணையின் பின்னர் யாழ் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
22 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
31 minute ago
1 hours ago