2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

காலிபிளவர் பறித்த தாயை கட்டிவைத்து தாக்கிய மகன்

Janu   / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசா மாநிலம் கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தை சேர்ந்தவர் சாரதா (வயது 70). கணவரை இழந்த சாரதாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி சரசபசி கிராமத்திலேயே வசித்து வந்தனர். சாரதா தனது மூத்த மகன் கருணாவின் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே, நோய் காரணமாக சமீபத்தில் மூத்த மகன் கருணா உயிரிழந்துதுள்ளார்.

அதேவேளை, சாரதாவின் இளைய மகன் சஸ்துருகன் தனது மனைவியுடன் அதேகிராமத்தில் தனியே வசித்து வந்தார். சஸ்துருகன் தோட்டத்தில் காலிபிளவர் பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில்  தனது இளைய மகன் சஸ்துருகனின் தோட்டத்தில் இருந்து சமைக்க காலிபிளவர் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், ஆத்திரமடங்காத   அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார்.

 மேலும், மாமியாரை காப்பாற்ற சென்ற மனைவியையும் சஸ்துருகன் தாக்கியுள்ளார். யாரேனும் தடுத்தால் அவர்களையும் தாக்குவேன் என்று ஊர் மக்களையும் மிரட்டியுள்ளார். இறுதியில் சஸ்துருகனிடமிருந்து அவரது தாயார் மற்றும் மனைவியை ஊர் மக்கள் மீட்டனர். மகன் தாக்கியதில் படுகாயமடைந்த சாரதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .