2025 ஜூலை 19, சனிக்கிழமை

காலை நக்கவைத்த கொடூ​​ர சம்பவம்

Freelancer   / 2023 ஜூலை 09 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பழங்குடி இனத்தை சேர்ந்தவர் மீது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாநில முதல்வரே தலையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறியதோடு, குற்றச் செயலில் ஈடுபட்டவர் மீது காவல்துறை நடவடிக்கை பாய்ந்தது.

இந்நிலையில், இதேபோன்ற மற்றும் ஓர் அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தப்ரா என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓடும் வாகனத்தில் ஒரு நபர் மற்றொரு நபரை பயங்ரமாக அடித்து தாக்குகிறார். மேலும் கண்டபடி வசைபாடுகிறார். அத்தோடு நிற்காமல் தனது காலை நக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி நக்க வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X