Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 22 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் தொற்று, மேலும் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா வைரஸ் பாதிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தொடர்பில் இருந்த 267 பேரில், அறிகுறியின் அடிப்படையில் ஆறு பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
இதில் இரண்டு பேருக்கும் நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2 பேரும் மலப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, நிபா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
34 minute ago
55 minute ago