Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 04 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடிமரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
கொடி மரத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தே, தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பட்டாச்சாரியர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இச்சம்பவத்தால், நடராஜர் கோவில் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய கொடிமரம் மாற்ற இன்று (4) காலை, வருகை தந்த அறநிலையத்துறை அதிகாரிகளுடன், தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனர்.
கொடி மரத்தை தற்போது உள்ளதை போல் மாற்றுவதை எதிர்க்கவில்லை, புதிதாக வளையம் போன்றவை வைப்பதை எதிர்க்கிறோம் என்று தீட்சிதர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கொடிமரம் தற்போது உள்ள நிலையிலேயே திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என எழுத்து மூலமாக தீட்சிதர்களுக்கு ஒப்புதல் கடிதம் அளிக்க கோவிந்தராஜபெருமாள் கோவில் அறங்காவலர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
53 minute ago
1 hours ago