Editorial / 2021 மே 27 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோயில் கோயிலாக திருவிழாக்களுக்கு சென்று விசிறி வீசும் 96 வயது ‘விசிறி தாத்தா’ நடராஜன், தற்போது கோயில்கள் மூடப்பட்டதால் திருவிழாக்கள் எதுவும் இல்லாமல் அன்றாட வாழ்வாதாரத்திற்கே சிரமப்பட்டு வருகிறார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழக்கமாக செல்கிற எல்லோரும், ‘விசிறி’ தாத்தா நடராஜனை பார்த்திருப்பார்கள். புதிதாக செல்பவர்கள், அவரை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். அவருடைய தொழிலுக்கும் கொரோனா ஊரடங்கு ஆப்பு வைத்துவிட்டது.
சாமி தரிசனத்திற்காக கோயில் வளாகத்திற்குள் வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வியர்த்துக் கொட்டும் நேரத்திலும் கூட்டம் அதிகமாகும்போது புழுக்கத்தால் மூச்சுவிடக் கூட முடியாமல் பக்தர்கள் தவிக்கும்போதும் அவர்கள் அருகே சென்று ‘விசிறி’தாத்தா நடராஜன், தான் கையில் பிடித்திருக்கும் மயில்தோகை விசிறியால் போதும் போதும் என்றளவிற்கு விசிறிக் குளிர்விப்பார்.
அதற்காக சன்மானம் எதுவும் அவர் கேட்கமாட்டார். கோயில் தரிசனம் நேரம் முடிந்தவுடன் சிறுசிறு கடைகளில் வேலை செய்து வாழ்க்கை ஓட்டி வந்தார். கோயிலுக்குள் யாரிடமும் கை நீட்டி உதவி கேட்கமாட்டார்.
“உடலில் நடமாடும் தெம்பு இருக்கும் வரை இந்தச் சேவையை செய்வேன். தற்போது விசிறி வீசவும் முடியவில்லை. வேலைக்குப் போகவும் முடியவில்லை. கோயில்கள் திறக்கவிட்டாலும் அன்றாடம் கடவுள் என்னைக் காப்பாற்றுகிறார்,’’ என்றார்.

6 minute ago
20 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
29 minute ago
1 hours ago