Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 04 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சிபுரத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தாhர். தாய் இறந்துவிட்ட நிலையில், அக்கா மற்றும் அப்பாவுடன் அவர் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் தந்தை கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவார காலம் சிறுமி தேவாலயத்தில் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது அங்கு பாதிரியாராக இருக்கும் தேவ இரக்கம் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி, அங்கிருந்து கத்தியபடி வீட்டிற்குச் சென்றாராம். இதையறிந்து அப்பகுதி மக்கள் சிலர், இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் தெரிவித்ததையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் உண்மை தெரியவந்த நிலையில்; பாதிரியார் தேவ இரக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
31 minute ago
39 minute ago