Freelancer / 2024 செப்டெம்பர் 16 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர், சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில், 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சிறுமி உடலை சாக்கு பையில் போட்டு, கழிவுநீர் கால்வாயில் வீசியிருந்தனர். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
பொலிஸ் விசாரணையில், சோலை நகரைச் சேர்ந்த 19 வயதான கருணாஸ், 56 வயதான விவேகானந்தன் ஆகியோர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று வனபுணர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்த பொலிஸார், அவர்களை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சிறையின் கழிவறையில் விவேகானந்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. உடலை மீட்ட சிறைக் காவலர்கள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.S
16 minute ago
19 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
28 minute ago