A.K.M. Ramzy / 2021 மே 20 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் துடியலூர் அனைத்து மகளிர் பொலிஸில் புகாரொன்றை அளித்துள்ளார்.
குறித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
'நானும் எனது கணவரும் எங்கள் பகுதியில் உள்ள சிமெண்ட் குடோனில் கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறோம். எங்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். எங்களது பகுதியை சேர்ந்த எனது அக்காவின் 17 வயது மகன் அடிக்கடி எங்களது வீட்டிற்கு டி.வி. பார்ப்பதற்காக வருவான்.
சம்பவத்தன்று நான் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த போது டி.வி. பார்ப்பதற்காக வந்து இருந்தான். அப்போது நான் அவனிடம் குழந்தைகளை பார்த்துக்கொள் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்றேன். அப்போது எனது 5 வயது பெண் குழந்தைக்கு 17 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதில் எனது மகள் வலியால் அலறி துடித்தார். அழும் சத்தம் கேட்டு நான் விரைந்து வந்து பார்த்த போது அவர் எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். என்னை பார்த்ததும் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் பொலிஸார் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
7 minute ago
13 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
37 minute ago