Editorial / 2026 மே 04 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இத்தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜனதா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவிய சூழலில், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' மற்றும் சீமானின் 'நாம் தமிழர் கட்சி' ஆகியவையும் களம் கண்டன.
இதுதவிர, டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் இணைந்து ஒரு கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டனர். இருப்பினும், களத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகளுக்கிடையேதான் கடும் போட்டி நிலவியது. 234 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 4,023 பேர் போட்டியிட்டனர். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்தச் சூழலில், பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' அதிரடியாக முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், த.வெ.க. தற்போது 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது நடிகர் விஜய்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், தற்போதைய நிலவரப்படி 'தமிழக வெற்றிக் கழகம்' தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருவது தமிழக அரசியலில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்துள்ளது.
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago