Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 17 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருச்சி, அரியமங்கலம் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில், திருச்சியைச் சேர்ந்த 32 வயதான சாரங்கன் என்ற திருநங்கை கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் சில மாதங்களுக்கு முன் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மாரீஸ்வரன் என்ற சிறைக்காவலர், சாரங்கனை அடிக்கடி ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார்;. இது, அங்குள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து சாரங்கன், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணையத்தில், சாரங்கன் புகார் அளித்தார்.
விசாரணையில் புகார் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குறித்த சிறைக்காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதேசமயம், குறித்த சிறைக்காவலர் தன்மீதான புகாரை கண்டுகொள்ளாமல் இருக்க, தன் செல்வாக்கை பயன்படுத்தியுள்ளதோடு, 50,000 ரூபாய் கைமாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
29 minute ago