Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஏப்ரல் 21 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹரியாணா மாநிலம் குருகிராம் அருகே அர்ஜுன் நகர் பகுதியில் எரியூட்டு மயானம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனிடையே குறித்த தகன மேடை சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்
மயானத்தில் சடலங்களை எரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள் சுற்றுச்சுவர் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சுற்றுச்சுவர் அருகே அமர்ந்து கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென சுற்றுச்சுவர் சரிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி 11 வயது தான்யா என்ற சிறுமி, 70 வயது தேவி தயாள், 54 வயது மனோஜ் காபா, 52 வயது கிருஷ்ணகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
गुरुग्राम में बड़ा हादसा। शमशान घाट के गेट की दीवार गिरी। बच्ची खुशबू सहित 4 लोगों पप्पू, कृष्ण, मनोज की मौत हुई। दीवार के किनारे लकड़ियों का ढेर लगा था। संभवत इसके चलते दीवार झुकी और गिर गई। #Haryana #Gurugram pic.twitter.com/Hyl1wxk7I6
— Sachin Gupta (@SachinGuptaUP) April 20, 2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago