A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி :
ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது, டில்லி ஆளுனரிடம் ஹிந்துசேனா அமைப்பு மனு அளித்துள்ளது.
டில்லி ஆளுனரிடம் ஹிந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா கொடுத்துள்ள மனு: கடந்த, 2019ல், லோக்சபா தேர்தல் நடந்த போது, தமிழகத்தின் அரவக்குறிச்சியில் மே, 12இல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசினார்.
கமல்ஹாசனுக்கு எதிராக, டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, ஜூன் 4 இல் விசாரணைக்கு வர உள்ளது. இது போன்ற வழக்குகளை தொடர, வழக்கு தொடரப்பட்டு ள்ள மாநிலத்தில் உள்ள அரசின் அனுமதி தேவை. அதனால், கமல்ஹாசன் மீது வழக்கு தொடர, அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் மனுவில் கூறியுள்ளார்.
15 minute ago
24 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
54 minute ago
1 hours ago