A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை :
தி.மு.க., எம்.பி., தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரிடம், தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., - எம்.பி.,யுமான தயாநிதி மாறன், 28ஆம் திகதி கிணத்துக்கடவு தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதை மேற்கொள் காட்டி, ஜெயலலிதாவையும், மோடியையும் சர்ச்சைக்குரிய விதத்தில், தயாநிதி விமர்சித்திருந்தார்.
'தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசிய, தயாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல், நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், புகார் மனு கொடுத்தார்.
அதன் அடிப்படையில், தயாநிதி பேச்சு குறித்து, கோவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம், தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை கேட்டுள்ளார்
13 minute ago
27 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
36 minute ago
1 hours ago