Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 11 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருத்துவமனை சிகிச்சைகளில் சந்தேகம் உள்ளது, மோசடி செய்கிறார்கள் என்ற புகார்கள் பொதுமக்கள் தரப்பில் இருந்து ஆங்காங்கே வரும். அப்படியொரு விசித்திரமான புகார் ஒன்று
உத்தரப் பிரதேச சித்தார்த் நகர் மாவட்டத்தில் கர்ப்பம் தரித்த தாய்க்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் தனியார் வைத்தியசாலையில் செய்யப்பட்டன.
ஒருநாள் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண்ணின் கர்ப்பத்தில் இரட்டை குழந்தைகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு ஆச்சரியம் அடைந்த உறவினர்கள் மற்றொரு இடத்திலும் போய் பரிசோதனை செய்தனர். அங்கும் இரட்டை குழந்தை உள்ளதாக சோதனை முடிவு தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த வாரம் பெண்ணுக்கு பிரசவ வலி வந்துள்ளது. வழக்கமாக காட்டும் தனியார் மருத்துவமனயில் அவர் அனுமதிக்கப்பட்டார். பிரசவம் நடைபெற்ற நிலையில், ஆர்வத்துடன் காத்திருந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி செய்தி வந்தது. பிரசவத்தில் ஒரு குழந்தைதான் பிறந்தது, பெண்ணின் கருவில் ஒரு குழந்தைதான் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் பரிசோதனையில் இரட்டை குழந்தை எனக் கூறப்பட்ட நிலையில், எப்படி ஒரு குழந்தைதான் இருக்கும் என கேள்வி எழுப்ப தொடங்கினர். ஒரு குழந்தையை மருத்துவமனை திருடிவிட்டது என புகார் கூறி போராட்டம் செய்துள்ளனர். தொடர்ந்து இவர்களை மருத்துவமனை நிர்வாகம் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
1 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago