Mayu / 2024 மார்ச் 12 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், ’கிரியேட் ஆன் இந்தியா’ இயக்கத்தை உருவாக்கிட டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தேசிய படைப்பாளிகள் விருதை மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், சமூக மாற்றம், கல்வி, சுற்றுச்சூழல், வேளாண், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் ஆக்கப்பூர்வமாக சிறந்து விளங்கிய 23 படைப்பாளிகளுக்கு டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி விருதுகளை வழங்கி வைத்திருந்தார்.
இதற்கமைய, சிறந்த கதை சொல்லிக்காக தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமிக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியின் காலில் கீர்த்திகா கோவிந்த சாமி விழுந்தார். பதிலுக்கு பிரதமரும் காலை தொட்டு வணங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
9 hours ago