Janu / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் ஒரு வயதான பெண்ணை, இரு பெண்களும், ஒரு ஆணும் சேர்ந்து கம்பால் தாக்கும் காணொளியொன்று வைரலாக பரவியுள்ளது.
இது தொடர்பில் மேற்கொண்ட பொலிஸ் விசாரணையில், அந்த வயதான பெண் முன்னி தேவி (வயது 65 ) என்றும், அவரை தாக்கியது, அவரது மூத்தமகன் மற்றும் இரு மருமகள்கள் எனவும் தெரியவந்துள்ளது . இந்த தாக்குதலுக்கு மருமகள்களின் குடும்பத்தினர் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது .
மேலும் இது தொடர்பில் சந்தேக நபர்களான இரு பெண்களை கைது செய்துள்ளதுடன் தலைமறைவாகியுள்ள ஏனையவர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026