Freelancer / 2023 ஒக்டோபர் 26 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - கனடா இடையேயான உறவில் கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ.
மேலும் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் இந்தியா மீது குற்றம்சாட்டி பேசினார். ஹர்தீப் சிங் கொலைக்கு பின்னணியில் இந்தியா இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். ஜஸ்டீன் ட்ரூடோவின் இந்த குற்றச்சாட்டுக்களை இந்திய அரசு மறுத்ததோடு கண்டனமும் தெரிவித்தது.
இதையடுத்து கனடாவில் இருந்த இந்திய தூதரை வெளியேற்றியது அந்நாட்டு அரசு. இதற்கு பதிலடியாக கனடா தூதர்களை வெளியேற உத்தரவிட்டது மத்திய அரசு மேலும் இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறும் உத்தரவிட்டது.
இந்த மோதல் காரணமாக கடந்த மாதம் 21ம் திகதி முதல் இந்தியா கனடாவுக்கான விசா சேவையை நிறுத்தியது. இதனால் கனடாவில் இருந்து இந்தியா வரமுடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் விசா வழங்கும் சேவையை தொடங்க வேண்டும் என்று கனடா அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தநிலையில் தற்போது இந்தியா மருத்துவ விசா, பிஸ்னஸ் விசா, என்ட்ரி விசா, கான்பரன்ஸ் விசா ஆகிய 4 விசா சேவைகள் தொடங்கியது.
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago