Freelancer / 2023 நவம்பர் 21 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேச மாநிலம் சம்ஷாபாத் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள், அப்பகுதி மக்கள் இரவு உணவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இரவு உணவு விருந்தில் பல்வேறு உணவு வகைகள், ரசகுல்லா உட்பட இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன. அப்போது, ரசகுல்லா இனிப்பு தீர்ந்துவிட்டதால் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரு தரப்பினர் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறி இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட நிலையில் இந்த சம்பவத்தில் 6 பேருக்கு காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் உத்தரபிரதேசம் எட்மட்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இனிப்பு வகைகள் தீர்ந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
19 minute ago
29 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 minute ago
51 minute ago