Janu / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சிறுவன் சிக்கு, தனக்கு மகேந்திரா நிறுவனத்தின் தார் கார் வாங்கவேண்டுமென தந்தையிடம் கேட்டுள்ளார். தன்னிடம் உள்ள 700 ரூபாயை வைத்து மகேந்திராவின் தார் காரை வாங்க முடியும் என எண்ணிய சிறுவன் தந்தையிடம் கேட்டுள்ளார். மகன் கூறியதை தந்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, சிறுவனின் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் தரவேற்றி ருசிகர கருத்து தெரிவித்துள்ளார்.
எனது நண்பன் சோனி இந்த வீடியோவை எனக்கு அனுப்பினார். ஆகையால் அவரின் வீடியோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமி பார்த்தேன். எனக்கு சிக்குவை (சிறுவன்) பிடித்திருக்கிறது. ஒரேயொரு பிரச்சினை என்னவென்றால் சிக்கு கூறியதை நாங்கள் உறுதிபடுத்தி காரை 700 ரூபாய்க்கு விற்றால் விரைவிலேயே நாங்கள் திவாலாகிவிடுவோம்' என ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

32 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
14 Apr 2026