Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூன் 26 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
லோக்சபா சபாநாயகராக குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். 2வது முறையாக சபாநாயகரான ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்நி மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சபாநாயகரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க பா.ஜ., எடுத்த முயற்சி பலன் அளிக்காததால், லோக்சபாவில் இன்று சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. தே.ஜ., கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, 'இண்டியா' கூட்டணி சார்பில் கே.சுரேஷ் போட்டியிட்டனர்.
இன்று காலை 11 மணிக்கு அவை கூடியதும் குரல் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் அதிகப்படியான எம்.பிக்கள் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், 2ஆவது முறையாக ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவரை சபாநாயகர் இருக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் பிரதமர் மோடி அழைத்து வந்தனர். அவருக்கு இருவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் பிரதமர் மோடி லோக்சபாவில் பேசுகையில், “சபாநாயகர் பதவி கடினமானது என்றாலும், ஓம் பிர்லா மீண்டும் தேர்வாகி உள்ளது மகிழ்ச்சி. சபாநாயகராக மீண்டும் தேர்வாகி உள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
28 minute ago
42 minute ago