2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சில இடங்களில் இடையூறு

Freelancer   / 2024 ஜூலை 10 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில், இந்த வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதில் அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளதால், திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைவேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, கானை உள்ளிட்ட மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவியது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வயர் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவியது. சிறிது நேர தாமதத்துக்கு பின் பழுதுகள் சரிசெய்யப்பட்டு மாம்பழப்பட்டு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியது.

எனினும், பல இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .