Mithuna / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலங்கானா மாநிலத்தில் பரவலாக இந்து திருமணங்களிலும் அசைவ உணவு பரிமாறப்படுகிறது. இதனை ஓர் அந்தஸ்தாக கருதுகின்றனர். ஆதலால், திருமணம் முடிந்ததும், தடபுடலாக பல வகை அசைவ உணவுகள் பரிமாறப்படுகின்றன.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தை சேர்த்த பெண்ணுக்கும், ஜகத்தியாலா பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த நவம்பர் மாதம் பெண் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது, பெண் வீட்டார் நிச்சயதார்த்த விழாவிற்கே அசைவ உணவு வகைகளை பரிமாறியுள்ளனர்.
ஆனால், இந்த கறி விருந்தில், நல்லி எலும்பு பரிமாறப்பட வில்லை எனும் வாதம் மாப்பிள்ளை வீட்டார் பக்கத்தில் எழுந்துள்ளது. இது மெல்ல பரவி, பெண் வீட்டாரின் காதுகளுக்கு எட்டியது. இதனால், இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவி, இறுதியில் அது கை கலப்பில் கொண்டு போய் விட்டு விட்டது.
இது குறித்து சிலர் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததால், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து, இரு வீட்டாரையும் அழைத்து பேசி அனுப்பி வைத்தனர். ஆனால், இச் சம்பவத்தால், மனம் உடைந்ததாகவும், அவமானம் ஏற்பட்டதாகும் கூறி, மாப்பிள்ளை விட்டார் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி விடுவதாக அறிவித்துள்ளனர்.
பெண் வீட்டாரும், இந்த திருமணத்திற்கு நாங்களும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளனர். நல்லி எலும்பால் ஒரு திருமணமே நின்று போகும் காட்சிகள், சமீபத்தில் வெளியான ‘பலகம்’ எனும் தெலுங்கு சினிமாவில் இருந்தது. அது இந்த சம்பவத்தால் உண்மையாகி விட்டது என பலர் கருத்து கூறி வருகின்றனர்.
44 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
14 Apr 2026