2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஹமாஸின் முக்கிய தலைவர் கேரளாவில் உரை

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பலஸ்தீனத்துக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளில் சிலர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.  கேரளாவில்இது போன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மஷால், ஆன்லைன் மூலம் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் சாலிடாரிட்டி இளைஞர் ஒற்றுமை இயக்கம் பலஸ்தீன ஆதரவு பேரணியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் காலித் மஷால் வீடியோவில் தோன்றி உரையாற்றி உள்ளார். அவர் பேசுகையில், சியோனிச பயங்கரவாத செயல்களில் இருந்து மஸ்ஜித் அக்சாவை விடுவிக்க முயற்சிக்கும் பலஸ்தீனப்போராளிகளுக்கு ஆதரவளிக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X