Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 12 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சத்தீஸ்கர் மாநில பிஹாலி பகுதியிலுள்ள ரயில்வே யார்டில் ராஜேந்திர குமார் என்பவர் வேலை செய்து வந்தார். ஜூன் 1 ஆம் திகதி அவர் தனது மனைவி, 10 மாத பெண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். குழந்தை மட்டும் உயிர் பிழைத்துள்ளது.
குழந்தைக்கு ரயில்வே துறை சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. பொதுவாக அரசு துறையில் இருப்பவர் பணியின்போது உயிரிழந்தால் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படுவது வழக்கம்.
அதனடிப்படையில், ராஜேந்திர குமாரின் 10 மாத குழந்தைக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே கோட்டத்தின் தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பணியாளர்கள் துறையில் (SECR) கருணை பணி நியமனத்திற்காக 10 மாத பெண் குழந்தை பதிவு செய்யப்பட்டது. 18 வயதை அடைந்தவுடன் அந்த பணியில் அவர் அமர்த்தப்படுவார். அக்குழந்தையின் கை ரேகைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago